மங்கலம்பேட்டை : முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவில் நான்காமாண்டு விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள், விளக்கேற்றி வழிபட்டனர். திருவிழா வரும் 9ம் தேதி வரை நடக்கிறது.