திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று சுவாதி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு லஷ்மி நரசிம்ம சுதர்சன ஹோமம், 11:00 மணிக்கு மூலவருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பகல் 12:30 மணிக்கு அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.