பதிவு செய்த நாள்
08
ஜூலை
2014
11:07
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பெரும்பாக்கம் வேங்கட வரதராஜப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பெரும்பாக்கம் பெருந்தேவி தாயார் சமேத வேங்கட வரதராஜப் பெருமாள் கோவிலில் பெருமாள், தாயார், ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கருடன், கல்யாண அனுமார் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று நிலை ராஜகோபுரம் புதிதாக அமைத்தனர். இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கலெக்டர் சம்பத், ஒன்றிய சேர்மன் இளங்கோவன், பி.டி.ஓ., குமாரி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக தர்மகர்த்தா முரளி, தர்மகர்த்தாக்கள் கண்ணன், விஜயராகவன், இந்து அற நிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் பிரகாஷ், ஆய்வாளர் கவியரசு, அர்ச்சகர் ஸ்ரீதரன் பட்டாச்சார் மற்றும் ரங்கநாதன் பட்டாச்சார் ஆகியோர் செய்திருந்தனர்.