பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2014 12:07
மானாமதுரை :மானாமதுரை, பாப்பாங்குளத்தில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில், 35 ஆண்டுகள் கழித்து, திருப்பணிகள் நடந்தது. இப்பணிகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்தனர். ஜூலை 5ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று 4ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு கடம் புறப்பாடும், காலை10:30 மணிக்கு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, நீலமேக விநாயகர், கருப்பண்ணசாமி, நாகர் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.