பதிவு செய்த நாள்
08
ஜூலை
2014
12:07
போடி,:போடி 15 வது வார்டு ஜே.கே.பட்டி அல்லி கம்பள அனுப்பக்கவுண்டர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்னம்மாள் சமேத ஸ்ரீ தொட்டராயர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீபாரதனையும், சாலைக்காளியம்மன் கோயிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. யாகசாலை பிரவேஷம், உபசாரம் சாற்றுமுறை பிரசாதம் வழங்குதல் நடந்தது. இன்று காலை 10 மணிக்கு கணபதி பூஜை, சோமகும்ப பூஜையும், மாலை 5 மணிக்கு விநாயகர், நவகிரகம், பரிவார சுவாமிகளுக்கு மூல மந்திரஹோமம், திவ்ய பிரபந்தம் 3ம் கால யாக பூஜை, இரவு 9 மணிக்கு 108 மூலிகைகள், பழ வகைகள் கொண்டு விசேஷ பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 10.30 மணிக்கு மேல் கோயிலில் அமைந்துள்ள ஓம் சக்தி விநாயகர், ஆஞ்சநேயர், விஜய தன்வந்திரி பகவான், லட்சுமி ஹயக்ரீவர், சுதர்சனருக்கும், ஒன்னம்மாள் சமேத ஸ்ரீ தொட்டராயருக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை ஜே.கே. பட்டி அல்லி கம்பள அனுப்பக்கவுண்டர் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.