லட்சுமி நாராயணசுவாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2014 12:07
ஆர்.கே.பேட்டை: வங்கனுார், லட்சுமி நாராயணசுவாமி கோவிலில், இன்று காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. இரவு, சந்திர பிரபையில் சுவாமி எழுந்தருளுகிறார். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, வங்கனுார் லட்சுமி நாராயணசுவாமி கோவிலில், மூன்றாம் ஆண்டு ஆனி பிரம்மோற்சவம், இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, நேற்று அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடந்தது. நாளை மாலை அனுமந்த வாகனத்திலும், வரும் சனிக்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு கருடசேவையும் நடக்கிறது. வரும் 14ம் தேதி தீர்த்தவாரியுடன், பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
நாள் கிழமை நிகழ்ச்சி
ஜூலை 8 செவ்வாய் கொடியேற்றம் ஜூலை 9 புதன் அனுமந்த வாகனம் ஜூலை 10 வியாழன் சேஷ வாகனம் ஜூலை 11 வெள்ளி திருமஞ்சனம் ஜூலை 12 சனி கருட சேவை ஜூலை 13 ஞாயிறு குதிரை வாகனம் ஜூலை 14 திங்கள் தீர்த்தவாரி