தியாகதுருகம்: பிரிதிவிமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சக்தி கரகம் அலங்கரித்து திருவீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திரசொற்பொழிவு நடந்தது. கடந்த 5ம் தேதி ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாண உற்சவமும், பின்னர் மோடி எடுத்தல் கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று மதியம் தீமிதித்தல், மாரியம்மன், காத்தவராயன், ஆரியமாலா உற்சவர் சிலைகள் அலங்கரித்து திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். சுற்று வட்டாரபகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.