பதிவு செய்த நாள்
08
ஜூலை
2014
12:07
ப.வேலூர்: மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ப.வேலூர் அடுத்த, பொத்தனூரில் மஹா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு விழாவை முன்னிட்டு, நேற்று மாலை, 4.30 மணிக்கு ஸ்வாமி திருத்தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (ஜூலை, 8) மாலை, 4 மணிக்கு குண்டம் இறங்கி, பக்தர்கள் அம்மனுக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். நாளை அலகு குத்தியும், அக்னிசட்டி எடுத்தும் ஸ்வாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். ஜூலை, 10ம் தேதி, அதிகாலை, 5 மணிக்கு கம்பம் பிடுங்குதல், கிடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி காலை, 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.