அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கம்மவார் வீமினியார் குலத்திற்கு பாத்தியப்பட்ட புட்டலம்மாள் ரேணுகாதேவி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முதல் நாள் மகா சங்கல்பம், புண்யாகவசனம், மருத்ஸங்கிரணம் அங்குரார்ப்பணம் வாஸ்து சாந்தி, கும்ப ஆவாஹணம் மற்றும் ஹோமங்கள்நடந்தன. அதிகாலையில் சுப்ரபாதம், வேத பாராயணம் திவ்யபிரபந்தம் மற்றும் யுக்தாதி ஹோமங்கள் நடந்தது. காலை 6 மணிக்கு பூர்ணாஹூதி, விசேஷ பூஜைகள், தசதானம், யாத்ரா தானம் மற்றும் கும்பாபிசேஷகம், வேத சாற்றுமுறை நடந்தது. ஜெயவிலாஸ் தொழில் அதிபர்கள் தினகரன், வரதராஜன் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் "நெஸ்கோ மலர் ஆசிரியர்கள் செய்தனர்.