திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள விளாச்சேரியில் 700 ஆண்டு பழமையான சீதா, லக்ஷ்மண சமேத பட்டாபி ஷேக ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கடைசியாக 1903ல் கும்பாபிஷேகம் நடந்துள்ள இக்கோயிலுக்கு, சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் காலை 4.30 மணிக்கு கணபதி ஹேமமும், தொடர்ந்து 5.30 மணிக்கு கடம் புறப்பாடும் நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சிவராம், திருப்பணிக்குழுத்தலைவர் மரகதவல்லி, பொருளாளர் சங்கர நாராயணன், செயலாளர் கண்ணன் செய்துள்ளனர்.