பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
02:07
திருவள்ளூர் : திருவள்ளூர் ஆனந்த சாய்ராம் கோவிலில், நாளை குரு பூர்ணிமா பூஜை நடக்கவுள்ளது. திருவள்ளூர் பஜாரில் அமைந்துள்ளது ஆனந்த சாய்ராம் கோவில். இங்கு, மூன்றாம் ஆண்டு குருபூர்ணிமா பூஜை நிறைவு விழா, இன்று துவங்கி, 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும், பஜனைகளும் நடைபெற உள்ளன. குருபூர்ணிமா பூஜையான நாளை காலை 5:30 மணிக்கு, காகட ஆர்த்தியும், 7:00 மணிக்கு, சாய்சத்யநாராயணா பூஜையும், பகல் 12:00 மணிக்கு, ஆரத்தியும், மாலை 5:00 மணிக்கு, ஆனந்த சாய்ராம் திருபல்லக்கில் பவனியும் நடைபெற உள்ளது.