வீரசக்திஅம்மன் கோயில் பூக்குழி இறங்கிநேர்த்தி கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2014 12:07
திருவாடானை: திருவாடானை அருகே அடுத்தகுடி வீரசக்திஅம்மன் கோயில் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா நேற்று அதிகாலை 3 மணிக்கு நடந்தது. இதில், பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. புல்லூர் முனிஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.