சிவகங்கை : சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிக்கான பாலாலய பூஜை நடந்தது. இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து,கடந்த 1996ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதற்கு பின், திருப்பணிகள் நடைபெறவில்லை. தற்போது, திருப்பணிகள் செய்யும் நோக்கில், உபயதாரர்கள் வழங்கும் நிதியில், 18 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பாபிஷேக திருப்பணிகளை துவங்கும் நோக்கில், நேற்று காலை 6 முதல் 7 மணிக்கு, கோயிலில், பாலாலய பூஜை நடந்தது. கும்பங்களில் புனித நீர் ஊற்றி, யாகசாலையில், சிறப்பு வேள்விகளுடன், திருப்பணி துவங்கின. அறநிலையத்துறை செயல் அலுவலர் இளையராஜா தலைமையில், பூஜை நடந்தது. ஏற்பாடுகளை சீனிவாச பட்டர் தலைமையில் செய்திருந்தனர்.