கோவில் தேர் புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2014 12:07
தியாகதுருகம்: புக்குளத்தில் உள்ள மலையம்மன் கோவிலுக்கு சொந்தமான தேரை புதுப்பிக்க வேண்டும். தியாகதுருகம் மலைமீதுள்ள பகவதி மலையம்மன் கோவில் தேர் புக்குளம் கிராமத்தில் உள் ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் திருவிழாவில் மலையம்மன் சிலையை வைத்து திருத்தேர் உற்சவம் நடக்கும். தேர் பழுதடைந்ததால் 4 ஆண்டுகளாக தேரோட்டம் நடத்த முடியவில்லை. இத்தேரை புதுப்பிக்க அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. புக்குளம் கோவில் எதிரில் வெட்டவெளியில் நிறுத்தியுள்ள தேர் வெயில், மழையால் வீணாகிறது. இதில் உள்ள கலைநயமிக்க மரச்சிற்பங்கள் சேதமடைகின்றன. தேரை சுற்றி மழைநீர் தே ங்குவதால் சக்கரங்கள் மக்கி வீணாகி வருகிறது. நூற்றாண்டு பழமையான பகவதி மலையம்மன் கோவிலின் தேரை புதுப்பிக்க இந்து அறநிலைய த்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.