சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயில் ஆனி பெருந்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2014 10:07
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சிந்தலக்கரையில் வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் 30ம் ஆண்டு ஆனி மாத சக்தி மாலை இரு முடி விழா துவங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேர்த்திக்கடனாக பக்தர்கள் இரு முடி கட்டி சிந்தலக்கரைக்கு வந்தனர். 42 அடி உயர வெக்காளியம்மன் சிலைக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின் வேள்வி பூஜை, மகாசித்தர் வழிபாடு, மும்மத பிரார்த்தனை நடந்தது. மாலையில், ராமமூர்த்தி சுவாமிகள் வெண்கல தீச்சட்டி ஏந்தி வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நேற்று காலை ராமமூர்த்தி சுவாமிகள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.