தியாகதுருகம்: பல்லகச்சேரி காலனியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. தியாகதுருகம் அடுத்த பல்லகச்சேரி காலனியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 7ம் தேதி காப்பு கட்டுலுடன் துவங்கியது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாரத சொற்பொழிவு நடந்தது. தினமும் சக்தி கரகம் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. கடந்த 13ம் தேதி மோடிஎடுத்தல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து காத்தவராயன், ஆரியமாலா திருக் கல்யாணம் நடந்தது. 14ம் தேதி இரவு கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும், 15ம் தேதி தேர் திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் சிலையை தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். பெண்கள் பொங்கல் வைத்தும், பக்தர்கள் அலகு குத்தி வழிப்பட்டனர். திட்டக்குழு உறுப்பினர் அய்யப்பா, துணை சேர்மன் தைலம்மாள் அய்யப்பா, அ.தி.மு.க., பாசறை ஒன்றிய செயலாளர் பிரபு, ஊராட்சி தலைவர் அலமேலு அருணாச்சலம், குமரவேல் கலந்து கொண்டனர்.