விழுப்புரம்: மழவராயனூர் கொஞ்சுமலை மாரியம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நாளை நடக்கிறது. இதையொட்டி நாளை (18ம் தேதி) காலை 9:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் கரகத்துடன் 108 பால்குடங்கள் ஊர்வலம் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம், மாலை 4:30க்கு 108 திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை மழவராயனூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.