திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய் நல்லூர் அடுத்த துலங்கம்பட்டு புற்றுவடிவிலான அங்காளம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு நேற்று ஞ்சல் உற்சவம் நடந்தது. காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அலங்கரித்த உற்சவர் அம்மன் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடினர். ஏற்பாடுகளை உற்சவதாரர் ரமேஷ் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.