ராமநாதபுரம்:ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயிலில் நேற்று காலை 10 மணிக்கு சுவாமி, மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். நெய் தீபமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜை, பாலாபிஷேகம் நடந்தது. வெட்டுடையாள் காளி அம்மன் கோயிலில் பெண்கள் எண்ணெய் தீபமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.