சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பெரிய நாயகி அம்மன் கோவிலில் ஆடி மாத பிறப்பு மற்றும் மழை வேண்டி குத்து விளக்கு பூஜை, கோமாதா பூஜை நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நாட்டார் ராமலிங்கம் தலைமையில் கோ பூஜை நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் 500 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேவபாண்டலம் பருவதராஜ குலத்தினர் செய்திருந்தனர்.