வைரபுரம் அம்மன் கோவிலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2014 12:07
திண்டிவனம்: வைரபுரம் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் அடுத்த வைரபுரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு நடந்தது. முன்னதாக கடந்த 9ம் தேதி காலை கொடியேற்றம் நடந்தது. தினமும் ஒரத்தி ஆசிரியர் பூங்காவனம் குழுவினர் மகாபாரத சொற்பொழிவும், 14ம் தேதி முதல் கீழ்சிவிறி பார்த்திபன், லட்சுமணன் தலைமையில் பாரதமாதா நாடக குழுவினரின் மகாபாரத நாடகம் நடந்து வருகிறது. தொடர்ந்து 18ம் தேதி அர்ச்சுணன் தபசு நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு 18 ம் நாள் போர்க்கள நிகழ்ச்சியில் அரவான் களப்பலியும், துரியோதனன் படுகளமும் நடந்தது. தொடர்ந்து திரவுபதி கூந்தல் முடியும் நிகழ்ச்சியும் நடந்தது. இளைஞர்களின் மணிவாசகர் அருட்பணி மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கபட்டது. மாலை 6 மணிக்கு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். பூஜைகளை பூசாரி குப்புசாமி செய்தார்.