செஞ்சி: சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை ஊரணி பொங்கல் வைத்தனர். இரவு 7.30 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. மீனாட்சியம்மன் அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார். பூஜைகளை குமார் அய்யர் செய்தார்.