கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில், உலக நன்மைக்காக விவேகானந்த கேந்திரத்தின் சார்பில் 1008 விளக்கு பூஜை நடந்தது. முன்னதாக, மகளிர் மாநாடு மற்றும் கோயில் நான்கு ரத வீதிகளில் ஊர்வலம் நடந்தது. பின்னர், நடந்த விளக்கு பூஜையில் விவேகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் தலைமை வகித்தார். சமஸ்தான தேவஸ்தான சரக செயலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். கோயில் பேஷ்கார் ஸ்ரீதர் வரவேற்றார். ஆசிரியர் மணி, செல்வராணி, கவுரி பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாகஜோதி செய்திருந்தார்.