கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் ஆடித்தவசு திருவிழாவையொட்டி, கால்நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலின் ஆடித்தபசு திருவிழா ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, கால்நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணிக்கு கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையுடன் ஆடித்தவசு கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.