ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2014 04:07
ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழாவை ஒட்டி கூழ்வார்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கூழ் ஊற்றினர். பின்னர் மதிய வேளையில் அன்ன தானம் நடைபெற்றது.பின்னர் பிரம்மாண்டமான புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் வேம்புலி அம்மன், தாய் மூகாம்பிகை, ஐயப்பன், ஐஸ்வர்ய ஈஸ்வரர்-மகாலஷ்மி விஷ்ணு ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்ப பல்லக்கு ஊர்வலத்தைத் துவக்கினர்.புஷ்ப பல்லக்கு ஊர்வலம் பழைய பேருந்து நிலையம் வழியாக வடக்கு மாட வீதி, பெரியகடை வீதி, எஸ்.எம்.ரோடு, பழனி ஆண்டவர் கோயில் தெரு, காந்தி சாலை வழியாக மீண்டும் கோயிலை சென்றடைந்தது. ஊர்வலத்தில் வாணவேடிக்கை, கரகாட்டம் ஆகியவை நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.