திருச்சி முருகன் கோவில்களில் ஆடிக் கிருத்திகை வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2014 02:07
திருச்சி: ஆடி கிருத்திகையையொட்டி, திருச்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிப்பாடு நடந்தது. திருச்சி, குமார வயலூர் முருகன் கோவிலில், நேற்று அதிகாலை முதல் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று அபிஷேகம் செய்தனர். ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவிலில், ஸ்வாமிக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. திருவானைக்காவல் பாலதண்டயுதபாணி கோவிலுக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் நாலுகால் மண்டப்பத்தில் இருந்து, பால் குடம் எடுத்து சென்று ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர்.