தஞ்சாவூர்: தஞ்சை மானோஜியப்பா வீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 7ம் தேதி கொடியேற்றி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு நிகழ்ச்சிகளுடன், நேற்று முன்தினம், காளி புறப்பாடு நடந்தது. கரந்தை வடவாற்றிலிருந்து புறப்பட்ட காளிதேவி தெற்கு வீதி, கீழவீதி, பழைய மீன் மார்க்கெட் ரோடு வழியாக நகரின் முக்கிய வீதிகளில், காளி நடனம் நடந்தது. நேற்று தீமிதி விழா நடந்து. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று பூசொரித்தல் நடக்கிறது.