பதிவு செய்த நாள்
22
ஜூலை
2014
02:07
துறையூர்: துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் திருத்தலத்தில், இன்று தேர்திருவிழா நடக்கிறது. துறையூர் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் ஆலயத்தில், இன்று மாலை, மூன்று மணிக்கு, பெரிய தேர் பவனி நடக்கிறது. கும்பகோணம் மறை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் திருத்தலத்தில் கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன், ஆண்டு பெரு விழா துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் மாலை திருப்பலி, மறையுரை நடந்தது. நேற்று காலை, 11 மணிக்கு சிறப்பு திருப்பலி, மாலை, 6 மணிக்கு சிறப்பு திருப்பலியுடன் மறையுரை, இரவு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை, மின் விளக்கு, மலர் அலங்கார ரதம் வீதி உலா நடந்தது. இன்று காலை, 5.30 மணிக்கு மலையடி திருப்பலி, 8.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மறையுரை, 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறும். மாலை, 3 மணிக்கு பெரிய தேர் வீதி உலா, மாலை, 6 மணிக்கு ஆலய பங்குத்தந்தை வின்சென்ட் ஆசிர்வாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.டி.எஸ்.பி., தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் செழியன், உப்பிலியபுரம் போலீஸார், இரண்டு கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.