உத்தரமேரூரை அடுத்த திரிசூலக் காளியம்மன் கோயில் தீமிதி விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2014 03:07
உத்தரமேரூரை அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் கோயிலில் 30-ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.பின்னர் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவில் பள்ளி மாணவ மாணவிகள், ஆதரவற்ற குழந்தைகள் 256 பேருக்கு சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், 75 முதியவர்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.மாலை அன்னை பரமேஸ்வரி அம்மையாருடன் 108 பக்தர்கள் விரதமிருந்து தீமித்தனர். பின்னர் ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் பட்டிமன்றம் நடந்தது. இவ்விழாவில் கலந்து கொண்ட 5000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஸ்ரீ திரிசூலக் காளியம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ஜி.காளிதாஸ், அறங்காவலர்கள், ஜி.சண்முக சுந்தர், ஜி.பாலமுருகன், கெüரவத் தலைவர் ராதாகிருஷ்ணன், விழாக் குழுவினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.