தியாதுருகம்: சாத்தனூர் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன், திரவுபதியம்மன் கோவில் திருவிழா 100 ஆண்டு களுக்கு பின் நாளை நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த சாத்தனூர் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன், திரவுபதியம்மன் கோவில் திருவிழா 100 ஆண்டுக ளுக்கு பின் கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங் கியது. தினம் சக்தி கரகம் அலங்கரித்து திருவீதியுலா நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் மகாபாரத பாடல் சொற் பொழி நிகழ்த்தப்பட்டது. 21ம் தேதி அரவான் களபலி நிகழ்ச்சி, நேற்று பால்குடம் எடுத்து ஊரணி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர். இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் திருவீதியுலா நடந்தது. நாளை பகல் 12 மணிக்கு மகாமாரியம்மனுக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் திரவுபதி அம்மனுக்கு திருத்தேர் வடம் பிடித்தலும், இரவு சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற் பாடுகளை விழா குழு வினர் செய் துள்ளனர்.