திண்டிவனம்: தீவனூர் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை அடுத்து நடந்த 48 நாள் மண்டல பூஜை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பகல் ஒரு மணிக்கு பூங்கரக வீதியுலா, மாலை 5 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை லட்சுமி நாராயணப்பெருமாள் கோவில் பரம்பரை தர்மகர்த்தா நாமக்காரர் முனுசாமி செய்திருந்திருந்தார்.