பதிவு செய்த நாள்
25
ஜூலை
2014
12:07
நாமக்கல்: மஹா யாக வேள்வி பூஜை விழா, நாமக்கல் ஐங்கரன் ஜோதிடப் பயிற்சி மற்றும் கல்வி மையத்தில் சார்பில் நடத்தப்படுகிறது. நாமக்கல் ஐங்கரன் ஜோதிடப் பயிற்சி மற்றும் கல்வி மையத்தின் சார்பில், நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில், மஹா வேள்வி யாக சங்கல்ப பூஜை நடக்கிறது. நாளை காலை, 6 மணிக்கு வாஸ்து சாந்தி, 7 மணிக்கு விநாயகர் வேள்வி, சரஸ்வதி பூஜை, மகாலட்சுமி பூஜை, துர்கா பூஜை நடக்கிறது. வரும், 27ம் தேதி, அதிகாலை, 5 மணிக்கு, மஹா வேள்வி யாக சங்கல்ப பூஜை, அதைதொடர்ந்து, மதியம், 2 மணிக்கு, ஜோதிடக் கல்வி பயின்ற மாணவருக்கு பட்டமளிப்பு விழா நடக்கிறது. அதில், குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி ஆகியவற்றிற்கான சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.