கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது. விழாவையொட்டி மூலவர் ராமநாதீஸ்வரருக்கும், நந்தித்தேவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர், பிரதோஷமூர்த்தி சுவாமி கோவிலின் உட்பிரகார வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணய்யர் மற்றும் பொன்னுமணி ஆகியோர் செய்திருந்தனர்.