நீராட்டம் என்ற சொல் திருப்பாவையில்1, 4, 13, 20, 25ம் பாடல்களில் உள்ளது. ஆனால், திருப்பாவை பாடல்களில், ஆயர்சிறுமியர் குளத்திற்குப் போய் நீராடிய, ஆடை உடுத்திய, அலங்காரம் செய்த செய்தி இடம் பெறவில்லை.காரணம், ஆண்டாள் குறிப்பிடும் நீராட்டம் என்பது வெறும் உடல் குளியல் அல்ல. திருமால் ஒரு தடாகம்(குளம்). அதில் ஜீவாத்மாக்களாகிய நாம் ஒன்றாகக் கலந்து குள்ளக் குடைந்து நீராட வேண்டும் என்பதே ஆண்டாளின் விருப்பம். திருப்பாவையை பக்தியுணர்வுடன் படித்தால் தான், இது புரியும்.