Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை பொருட்கள் விலை குறைப்பு! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் ஆடி அமாவாசை கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2014
10:07

வத்திராயிருப்பு: பூலோக கயிலை’ என பக்தர்களால் போற்றப்படும் புகழ்பெற்ற மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதற்காக, ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். புராண காலத்தில் வாழ்ந்த 18 சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து இறைவனை வழிபட்ட சிறப்புடையது இம்மலை. விருதுநகர் மற்றும் மதுரைமாவட்டங்களில் அமைந்துள்ளது. சித்தர்களின் வேண்டுகோளை ஏற்று இறைவன் அவர்களுக்கு இங்கு நேரில் வந்து காட்சி கொடுத்தது ஆடி அமாவாசை தினமாகும். எனவே, இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு இத்திருவிழா இரு தினங்களுக்கு முன் பிரதோஷ பூஜைகளுடன் துவங்கியது.

அதிகாலை 5.30 மணிக்கு மலையில் உள்ள சுந்தரமகாலிங்க சுவாமி, சந்தனமகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து சுந்தரமகாலிங்கசுவாமிக்கு நாகாபரண அலங்காரமும், சந்தனமகாலிங்க சுவாமிக்கும், சுந்தரமூர்த்தி சுவாமிக்கும் ராஜஅலங்காரமும், நடைபெறவுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் வருகை துவங்கியது. மலையிலும், அடிவாரப்பகுதிகளான வாழைத்தோப்பு, தாணிப்பாறை அதனை சுற்றியுள்ள வயல்வெளிகள், தோப்புகளிலும் ஏராளமானோர் தங்கியுள்ளனர். மதுரை, விருதுநகர், தேனி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம், கோவில்பட்டி, திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உட்பட பல்வேறு நகரங்களிலிருந்தும் மலையடிவாரத்திற்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar