பதிவு செய்த நாள்
26
ஜூலை
2014
11:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்து, உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் வேதா, மேற்பார்வையாளர் துவாரகநாத் ஆகியோர் முன்னிலையில், இப்பணியில், 150 பேர் ஈடுபட்டனர். 23 உண்டியல்களில், பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதில், உண்டியல் காணிக்கையாக, 67 லட்சத்து, 22 ஆயிரத்து, 958 ரூபாய் இருந்தது. மேலும், 144 கிராம் தங்கமும், 351 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.