பதிவு செய்த நாள்
26
ஜூலை
2014
11:07
ராசிபுரம்: ஆடி வெள்ளி முன்னிட்டு, ராசிபுரம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். ராசிபுரம் அடுத்த அத்தனூரில், பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம், ஆராதனை கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவை முன்னிட்டு, ஸ்வாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஸ்வாமி, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். * ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவிலில், 2,000 வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராசிபுரம் மாரியம்மன் கோவிலில், ஸ்வாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, கூல் மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.* காட்டூர் சாலையில் உள்ள அங்காளம்மன் கோவிலில், ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.