தான்தோன்றீஸ்வரர் கோவிலில் இன்று வரமிளகாய்தீப வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2014 11:07
திருச்சி: உறையூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று காலை, வரமிளகாய் தீப வழிபாடு நடக்கிறது.திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை நாளில், வரமிளகாய் தீப வழிப்பாடு நடைபெறுவது வழக்கம். இந்த வழிப்பாட்டில் பங்கேற்றால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என ஐதீகம்.இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, கோவிலில் உள்ள பாதாள காளி சிலை, தில்லை காளிசிலைகளுக்கு, சிறப்பு வரமிளகாய் தீப வழிபாடும், சிறப்பு ஹோமமும் நடைபெற உள்ளது என, கோவில் பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.