பதிவு செய்த நாள்
31
ஜூலை
2014
02:07
சேலம்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வேம்பரசர் விநாயகர் கோவிலில், கருமாரியம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்யப்பட்டது. சேலம் தாதுபாய்குட்டை பகுதியில், வேம்பரசர் விநாயகர், கருமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை ஏழு மணிக்கு ஸ்ரீ வேம்பரசனர் விநாயகர் மகளிர் சுய உதவிக்குழுவினர், ஓம்சக்தி வேம்பரசர் ஆலய அனைத்து மகளிர் மன்றத்தினர் சார்பில், ஆடிப்பூரம் நிகழ்ச்சி நடந்தது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 8 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, காலை, 9 மணிக்கு நாகசதுர்த்தி மூலமந்திரம் பரிகாரஹோமம் நடத்தப்பட்டது. காலை, 11 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, 12 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபாடு நடத்தி சென்றனர்.