Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொட்டும் மழை நிறைபுத்தரி பூஜை : ... திருப்பதி ஏழுமலையான் வங்கி கணக்கில் மீண்டும் 1,800 கிலோ தங்கம்! திருப்பதி ஏழுமலையான் வங்கி கணக்கில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஆக
2014
11:08

சின்னமனூர் : தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடித்திருவிழாவில் சனீஸ்வரர்-நீலாதேவி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள்
பங்கேற்றனர். குச்சனூர் சனீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளது தனிச்சிறப்பு. இங்கு ஆடி மாதம் முழுவதும் சனிவாரங்களில் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடந்து வருகிறது. இரண்டு சனிவாரங்கள் முடிந்துள்ள நிலையில், நேற்று திருக் கல்யாண வைபவம் நடந்தது. காலையில் துவங்கி திருக் கல்யாண நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்தது. முதலில் உற்சவர் சன்னதியில் இருந்து அழைத்து வரப்பட்டு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடையில் அமர்த்தப்பட்டார். திருக்கல்யாண ஹோமம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது. பின்னர் நீலாதேவி அம்பாளை சக்தி குடமாக பாவித்து அழைத்து வந்தனர். சுவாமியும் அம்பாளும் திருக்கல்யாண கோலத்தில் நீலப்பட்டு உடுத்தி காட்சியளித்தனர். கோயில் தலைமை பூஜாரி திருமலை ஜெயபால் முத்து, மங்கள நாணை சுவாமி சனீஸ்வரரிடமிருந்து அம்பாள் நீலாதேவிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார். வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுரபி நதியில் நீராடி திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar