கீழக்கரை:கீழக்கரை தட்டார்தெருவில் உள்ள உக்கிரவீரமா காளியம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அம்பாள், சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சக்தி ஸ்தோத்திரங்கள், பஜனை, பாராயணம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் விஸ்வக்கிய தங்கம், வெள்ளி தொழிலாளர் சங்கத்தினர் செய்திருந்தனர்.