காரிமங்கலம்: காரிமங்கலத்தை அடுத்த, வெள்ளையன் கொட்டாவூர் மகா சக்தி மாரியம்மன் கோவில் ஆடி மூன்றாம் வெள்ளி கிழமையை முன்னிட்டு, குத்து விளக்கு பூஜை இன்று மாலை நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, மாலை, நான்கு மணிக்கு கணபதி ஹோமமும், 6 மணிக்கு, குத்து விளக்கு பூஜையும், 7 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. அருணேஸ்வரர் கோவில் குருக்கள் புருஷோத்தமன் தலைமை வகித்து, குத்துவிளக்கு பூஜையை நடத்தி வைக்கிறார். இப்பூஜையில், பெண்கள் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்று, கோவில் நிர்வாகம் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.