தியாகதுருகம் : வடதொரசலூர் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.தியாகதுருகம் அடுத்த வடதொரசலூரில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 25ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. தினமும் சக்தி கரகம் அலங்கரித்து திருவீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரியம்மன் சரித்திர பாடல் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.எல்லை பிடாரியம்மன், அய்யனார், குள்ளகருப்பன் சுவாமிக்கு ஊரணி பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 31 ம் தேதி மோடி எடுத்தல், காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாண வைபவமும், அடுத்தநாள் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. பெண்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி நேர்த்திகடன் செலுத்தினர். இரவு தெருக்கூத்து நடந்தது.