பதிவு செய்த நாள்
05
ஆக
2014
10:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை( ஆக.6) ஆடித்
திருக்கல்யாணம் 17ம் நாள் திருவிழாவையொட்டி, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு
ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருள உள்ளனர். இதனையொட்டி, அன்று அதிகாலை 2 மணிக்கு, ராமேஸ்வரம் கோயில் நடை திறந்து, காலை 3 முதல் 4 மணி வரை, ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதனைதொடர்ந்து கால பூஜைகள் நடைபெற்றவுடன், காலை 6 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளி, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடானவுடன், கோயில் நடை சாத்தப்படும். பின், சுவாமி புறப்பாடாகி கோயிலுக்கு திரும்பியதும், இரவு 10 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, அர்த்தசாம பூஜைகள் முடிந்ததும், மீண்டும் கோயில் நடைசாத்தப்படும்.