பதிவு செய்த நாள்
05
ஆக
2014
10:08
லாலாப்பேட்டை : மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், தங்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஆடி மாத திருவிழா : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டுமகாதானபுரத்தில்பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும், இந்த கோவிலில், ஆடி மாத திருவிழாவின் போது, பக்தர்கள், தங்கள் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டு,நேர்த்திக்கடன் செலுத்துவர். பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணி முதல், மகாலட்சுமி அம்மனுக்கு, சிறப்புஅபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. காலை, 7:45 மணி முதல், கோவில் வளாகத்தில், பக்தர்கள் வரிசையில் அமர வைக்கப்பட்டனர். காலை, 9:21 மணிக்கு, 15வது தலைமுறை கோவில் பரம்பரை பூசாரி பெரியசாமி, ஆணி காலணி அணிந்து பூஜை நடத்தினார். தொடர்ந்து, கோவில் கொடிமரத்தில் விளக்கு ஏற்றப்பட்டது.450 பக்தர்கள் : காலை, 9:27 மணி முதல், கோவில் வளாகத்தில் வரிசையாக அமர்ந்திருந்த, 450க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் தலையில், பூசாரி பெரியசாமி, தேங்காய் உடைத்தார். தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதற்காக வந்திருந்த, 20
யதுக்கு உட்பட்ட பக்தர்கள், வெளியேற்றப்பட்டனர். ஏ.டி.எஸ்.பி., மனோகரன், கரூர் டி.எஸ்.பி., கலைராஜன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.