திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி விநாயகர் கோவிலில், ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கடந்த 1ம் தேதி மாலை குத்து விளக்கு பூஜை நடந்தது. மாலை 4 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை, லட்சார்ச்சனை, சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.