வத்தலக்குண்டு : விராலிப்பட்டி கோட் டை கருப்பணசாமி கோயில் திருவிழாவில் ஒரு நாள் உண்டியல் வசூலாக 4 லட்ச ரூபாய் கிடைத்தது.வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் கருப்பணசாமிக்கு நேர்த்திகடனாக பலி கொடுக்கப்பட்டன. ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்றனர். விழாவிற்கு மறுநாளில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் வினோஜி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ரமேஷ் முன்னிலையில் உண்டியல் எண்ணப்பட்டது. 4 லட்சத்து 7 ஆயிரத்து 689 ரூபாய் உண்டியல் மூலம் கிடைத்தது.