சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த கூகையூரில் எல்லை காத்த மாரியம்மனுக்கு 8ம் ஆண்டு பால்குட விழா நடந்தது. விழாவையொட்டி காலை 9:00 மணிக்கு அம்மன் கோவிலில் இருந்து, பால்குடம் ஏந்திய பக்தர்கள் தேரோடும் வீதி வழியாக ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து பால் அபிஷேகம் நடந்தது. ஊரணி பொங்கல் வைத்து படையலும், அம்மன் வீதியுலாவும் நடந்தது.