Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதி வைத்தியநாதர் கோயிலில் 12 ... அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்திற்கு ரூ.3,000 கோடி நன்கொடை அயோத்தி ராமர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

30 அக்
2025
10:10

பண்ருட்டி: பண்ருட்டி அருகே, 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால மூத்ததேவி கல் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.


கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பைத்தாம்பாடி வயல் பகுதியில் புதர்களுக்கு மத்தியில் ஒரு கல் சிற்பம் மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் இருந்தது. அப்பகுதியை சேர்ந்த சக்தி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல், அங்கு வந்து சிற்பத்தை ஆய்வு செய்தார். அப்போது, 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்திய மூத்ததேவி சிற்பம் என தெரியவந்தது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறுகையில், இச்சிற்பம் 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தியது. பலகை கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவியின் தலையில் கரண்ட மகுடம், காதில் மகர குண்டலம், கழுத்தில் சரப்பணி என்ற கழுத்தணி். வலது கரத்தில் அவரது மகன் மாந்தன் ரிஷப முகத்துடனும், இடது புறத்தில் மகள் மாந்தினியும் உள்ளனர். மூத்ததேவியின் சின்னமான காக்கையும், துடப்பமும் , சிற்பத்தில் சிதைந்த நிலையில் உள்ளது.


கிராமங்களில் ஏரிக்கரை, வயல் வெளி, ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றில் நீர்நிலைகளை பாதுகாக்கும் தெய்வமாக மூத்ததேவியின் சிற்பத்தை அமைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். லட்சுமிக்கு முன்பு தோன்றியவள் என்பதால் மூத்ததேவி என்றும் மூத்தாள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்பெயரே பிற்காலத்தில் மருவி, ‘மூதேவி’ என்றாயிற்று. ஜேஷ்டா தேவி என்பது வடமொழிச் சொல். ஜேஷ்டா என்றால் முதல் என்று பொருள். மேலும் பழையோள், காக்கை கொடியோள் என்றும் மூத்ததேவியை அழைக்கின்றனர். காகத்தை கொடியாகவும், கழுதையை வாகனமாகவும், துடைப்பத்தை ஆயுதமாகவும் கொண்டவள். 15ம் நூற்றாண்டு வரை மூத்ததேவி வழிபாடு மக்களிடம் இருந்தது. பின் காலப்போக்கில் மறைந்துவிட்டது என, தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மண்ணிப்பள்ளம் ஆதி வைத்தியநாத கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முருகன் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
அயோத்தி: உ.பி.,யில் உள்ள அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டுமான பணிக்கான நிதி திரட்டும் பிரசாரம் கடந்த, ... மேலும்
 
temple news
அயோத்தி ; அயோத்தி ராம ஜென்மபூமி கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பக்தர்களுக்காக சிறப்பு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar