தஞ்சை மேலவீதியில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோவிலில் அடுத்தமாதம்(செப்டம்பர்) 16–ந்தேதி முதல் 27–ந்தேதி வரை கோகுலாஷ்டமி உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி 4 நாட்கள் பக்தி சொற்பொழிவு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி bõ°ÓßÖ பக்தி சொற்பொழிவு தொடங்கியது.இதில் மகாரண்யம் முரளீதரசுவாமிகள் கலந்து கொண்டு, பக்தி சொற்பொழிவு ஆற்றினார். அப்போது அவர், ராமஅவதாரம், கிருஷ்ணஅவதாரமும் முக்கியமான அவதாரமாகும். இந்த பிரபஞ்சத்தில் தவறு செய்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள். நதிகள் எல்லாம் சமுத்திரத்தை தேடி செல்வதைபோல், குணங்கள் எல்லாம் இறைவனிடத்தில் உள்ளது. மூர்க்க குணம் படைத்தவர்களை கூட ராம நாமம் சாந்தப்படுத்திவிடும். உலகில் அதிக மொழிகளில் ராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நவநீத கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடக்கிறது. தொடர்ந்து 6–ந்தேதி வரை நடக்கிறது.